ADDED : செப் 09, 2026 07:31 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வளையர்பாளையம், தாலுகா அலுவலக சாலை ஆகிய இடங்களில் டவுன் பஞ்சாயத்து சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய குப்பையை அகற்றுதல், பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்களை அகற்றுதல், கழிவுநீர் கால்வாயை துாய்மை செய்தல் மற்றும் வீடுகளில் இருந்து கழிவுநீர் செல்லும் வழித்தடங்களில் பிளிச்சீங் பவுடர் தெளித்தல், நல்ல குடிநீர் தொட்டியை மூடி வைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. டவுன் பஞ்சாயத்து சுகாதார பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பணிகளை ஆய்வு செய்தார்.
