/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி
/
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் கொசு ஒழிப்பு பணி
ADDED : அக் 07, 2025 01:07 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி பகுதிகளில், பெய்த மழையால் நீர் தேங்கிய இடங்களை சுத்தம் செய்யும் பணி நடந்து வருகிறது.
அரவக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், பொதுமக்களை நோயில் இருந்து பாதுகாக்கும் வகையில், பள்ளப்பட்டி நகராட்சி மற்றும் அரவக்குறிச்சி பேரூராட்சிகளில் தீவிர கொசு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கொசுப்புழு ஒழிப்பு மற்றும் முதிர் கொசு அழிப்பு பணியை தீவிரப்படுத்தி துாய்மை பணியாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். பணிகளை பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி ஆகியோர் பார்வையிட்டனர்.