ADDED : மே 14, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, தொட்டியப்பட்டி கிராமத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் மக்கள் வசிக்கும் இடங்களில், மழை காலங்களில் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் வீடுகளில் இருந்து கழிவுநீர் அகற்றுதல், பழைய டயர்கள், பிளாஸ்டிகள் கழிவு பொருட்களை அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணியில் பொது சுகாதாரத்துறையை சேர்ந்த மஸ்துார் பணியாளர்கள், டவுன் பஞ்சாயத்து சுகாதார ஊழியர்கள் இணைந்து ஈடுபட்டனர்.