/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கண்ணமுத்தாம்பட்டியில் கொசு ஒழிப்பு பணி
/
கண்ணமுத்தாம்பட்டியில் கொசு ஒழிப்பு பணி
ADDED : ஜன 22, 2026 07:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த கண்ணமுத்தாம்பட்டி கிராமத்தில், பஞ்சப்பட்டி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய பொது சுகாதாரத்துறை சார்பில், கொசு ஒழிப்பு பணி நடந்தது.
மக்கள் குடியிருப்பு பகுதிகளில், தேவையில்லாத கழிவுகுப்பைகளை அகற்றுதல், பிளாஸ்டிக் கழிவு, பழைய டயர்கள் அகற்றுதல், குடிநீர் தொட்டி பராமரிப்பு பணி, நல்ல குடிநீரை மூடி வைத்தல், கழிவு நீர் தேங்கிய பகுதிகளில் கொசு புழுக்கள் பரவலை தடுக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர் தெளித்தல், ஆகிய பணிகள் மேற்கொள்-ளப்பட்டன. இப்பணிகளில் பொது சுகாதாரத்து-றையை சேர்ந்த மஸ்துார் பணியாளர்கள் ஈடுபட்-டனர்.

