ADDED : மார் 02, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, காட்டூரில், இரவு நேரங்களில் கொசுக்கள் அதிகளவில் பரவி வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. மக்கள் வசித்து வரும் குடியிருப்பு வீடுகளில், தேங்கியுள்ள கழிவு நீர் வெளியேற்றும் வகையில் ஆலோசனை வழங்குதல், சுற்றுபுறத்துாய்மை, நல்ல குடிநீர் மூடி வைத்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு, பிளிச்சீங் பவுடர் தெளிப்பு, பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றுதல் ஆகிய பணிகள் செய்யப்பட்டன. மஸ்துார் பணியாளர்கள் பணிகளில் ஈடுபட்டனர்.

