/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரத்தில் கொசு ஒழிப்பு பணி
/
கிருஷ்ணராயபுரத்தில் கொசு ஒழிப்பு பணி
ADDED : ஏப் 29, 2025 01:47 AM
கிருஷ்ணராயபுரம்:
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து பகுதிகளில், கொசு ஒழிப்பு பணிகள் நடந்தன.
கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாலுகா அலுவலக சாலை, பகவதியம்மன் கோவில் தெரு, கடைவீதி ஆகிய பகுதிகளில் டவுன் பஞ்., சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில் குடியிருப்பு பகுதிகளில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்கள் மற்றும் கழிவு பொருட்களை கண்டறிந்து அகற்றுதல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், கழிவுநீர் தேங்கிய இடங்களில் கொசுக்கள் பரவலை தடுக்கும் வகையில் பிளிச்சீங் பவுடர் தெளித்தல் ஆகிய பணிகள் செய்யப்பட்டன.
டவுன் பஞ்சாயத்து துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். பணிகளை டவுன் பஞ்சாயத்து சுகாதார மேற்பார்வையாளர் சண்முகம் பார்வையிட்டார்.