ADDED : டிச 15, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், டிச. 15-
கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டி கிராமத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. இதில், மழை காலங்களில் வீடுகளில் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் மக்களுக்கு ஆலோசனை வழங்குதல், மழை நீர் தேங்கி இருந்தால் அதனை அகற்றுதல், அந்த பகுதியில் பிளிச்சீங் பவுடரை தெளித்தல், நல்ல குடிநீர் மூடி வைத்தல், குடிநீர் தொட்டி பராமரிப்பு செய்தல் ஆகிய பணிகள் நடந்தது.