/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை
/
கிணற்றில் குதித்து தாய், மகன் தற்கொலை
ADDED : செப் 22, 2024 01:42 AM
குளித்தலை:கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த கீழசுக்காம்பட்டியை சேர்ந்தவர் அருண், 30; இவரது மனைவி லட்சுமி,27.
தம்பதிக்கு நிஷாந்த், 4, தர்ஷன், 6, என இரு மகன்கள் இருந்தனர். மேல சுக்காம்பட்டியில் உள்ள சுப்ரமணி என்பவரின் தோட்டத்தில், தண்ணீர் பாய்ச்சும் வேலை செய்து, அருண் குடும்பத்துடன் வசித்தார்.
நேற்று காலை, லட்சுமி தன் இரு மகன்களையும் தோட்டத்தில் உள்ள கிணற்றில் தள்ளிவிட்டு, தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதில், லட்சுமி, நிஷாந்த் நீரில் மூழ்கி பலியாகினர். தர்ஷன் கிணற்றில் இருந்த மோட்டார் கயிற்றை பிடித்துக்கொண்டு, கூச்சலிட்டவாறு தத்தளித்துக் கொண்டிருந்தார்.
தகவலறிந்த முசிறி தீயணைப்புத்துறையினர், தர்ஷனை மீட்டனர். மேலும், லட்சுமி, நிஷாந்த் சடலத்தை மீட்டனர். இது குறித்து குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.