ADDED : ஆக 19, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
குளித்தலை;குளித்தலை
அடுத்த ஆர்.டி., மலை பஞ்., மேல வாலியாம்பட்டியை சேர்ந்தவர் மீனா, 42;
திருச்சி ஓட்டலில் சமையல் வேலை செய்து வந்தார். இவரது மகள் காவியா, 14,
ஆலத்துார் அரசு மேல்நிலை பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த, 16ல் வழக்கம்போல் தாய் திருச்சி ஓட்டலுக்கு வேலைக்கு
சென்றுவிட்டு, இரவு, 9:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது, மகள்
காவியாவை காணவில்லை. நண்பர்கள், உறவினர்களிடம் விசாரித்தும் எந்த
தகவலும் இல்லை. இதையடுத்து, மகளை காணவில்லை என தாய் கொடுத்த புகாரின்
படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து
வருகின்றனர்.
