ADDED : ஆக 30, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
குளித்தலை,:குளித்தலை
அடுத்த பழையஜெயங்கொண்டம் டவுன் பஞ்., எம்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில்
தெருவை சேர்ந்தவர் குமார் மனைவி தீபா, 40; கூலித்தொழிலாளி. இவரது மகள்
தர்ஷினி, 17; கரூர் தனியார் கல்லுாரியில் பி.காம்., படித்து வந்தார்.
நேற்று
முன்தினம், தீபா வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்து தர்ஷினி
மாலையில் மாயமானார். தோழிகள், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும், தர்ஷினி
குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. தாய் தீபா கொடுத்த புகார்படி,
லாலாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
