ADDED : செப் 21, 2026 06:16 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை அடுத்த புனவாசிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கீதா, 38; கரும்பு வெட்டும் தொழிலாளி. இவரது மகள் கோபிகா, 19; ஜெகதாபியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., படித்து வந்தார். கடந்த, 16 காலை, 9:00 மணிக்கு வழக்கம்போல் கல்லுாரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். மீண்டும் திரும்பி வரவில்லை.
தோழிகளிடம் விசாரித்தும், அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. காணாமல் போன மகளை கண்டுபிடித்து தரக்கோரி தாய் கொடுத்த புகார்படி, லாலாபேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
