/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடும்ப தகராறில் மாமியார் கொலை: மருமகள் கைது
/
குடும்ப தகராறில் மாமியார் கொலை: மருமகள் கைது
ADDED : செப் 21, 2024 07:36 AM
கரூர்: தென்னிலை அருகே, குடும்ப தகராறில் மாமியாரை கல்லால் அடித்து கொன்ற, மருமகளை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை வெட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் லோகநாதன், 50. இவர், மனைவி விஜயலட்சுமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தாய் பார்வதி, 70; மகன், மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் லோகநாத னின் மனைவி விஜ-யலட்சுமி, 45; திருப்பூரில் இருந்து மகன், மகளை பார்க்க வெட்டு-காட்டு
வலசில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, ஆடு மேய்க்க சென்ற லோகநாதனின் தாய் பார்வதி இரவு வீடு திரும்-பவில்லை. நேற்று,
வெட்டுக்காட்டு வலசு காட்டுப் பகுதியில் முகத்தில் காயங்களுடன் பார்வதி இறந்து கிடந்தார். தகவல் அறிந்த, தென்னிலை போலீசார், பார்வதி
உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது, குடும்ப தகராறு காரணமாக மருமகள் விஜயலட்சுமி, ஆடு மேய்த்து கொண்டிருந்த மாமியார் பார்வதியை, கல்லால் அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து விஜயலட்சுமியை, தென்-னிலை
போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.மல்லுாரில் சாலை பணிபூஜை போட்டு தொடக்கம்பனமரத்துப்பட்டி: மல்லுார் டவுன் பஞ்சாயத்து அத்திக்குட்டை, கிழக்கு காட்டுக்-கொட்டாய் வழியே பனமரத்துப்பட்டி செல்லும் சாலை சீரழிந்-துள்ளது. இதை
புதுப்பிக்க, நகர்புற சாலை மேம்பாட்டு திட்-டத்தில், 77.60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல், 9, 12வது வார்டுகளில் கலைஞர் நகர்
புற சாலை மேம்பாட்டு திட்-டத்தில், 49 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. நேற்று, டவுன் பஞ்சாயத்து
துணைத்தலைர் அய்யனார் முன்னிலையில், தி.மு.க.,வின் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், பூஜை செய்து சாலை அமைக்கும்
பணிகளை தொடங்கி வைத்தார். பனமரத்துப்பட்டி தி.மு.க., ஒன்-றிய செயலர் உமாசங்கர், டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் பங்-கேற்றனர்.