ADDED : ஜூன் 26, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, தாயை காணவில்லை என, போலீசில் மகள் புகார் செய்துள்ளார்.
வேலாயுதம்பாளையம், செம்படாம்பாளையம் கிழக்கு பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்பவரது மனைவி துர்க்கா தேவி, 34. இவர் தாய் பாக்கியலட்சுமி, 55, என்பவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக பாக்கியலட்சுமி கடந்த, 24ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், திரும்பி வரவில்லை. இதுகுறித்து, மகள் துர்க்கா தேவி போலீசில் புகார் செய்தார்.வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.