தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இரு குழந்தைகளுடன் தாய் மாயம்

இரு குழந்தைகளுடன் தாய் மாயம்

இரு குழந்தைகளுடன் தாய் மாயம்


ADDED : ஏப் 17, 2026 06:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை, திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த ராக்கம்பட்டியை சேர்ந்தவர் சிந்தனைசெல்வன், 60. விவசாயி. இவரது மகள் கவுசல்யா , 28, என்பவரை குளித்தலை அடுத்த கீழவெளியூர் கீழத்தெருவை சேர்ந்த சண்முகவடிவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு கீர்த்திவாசன், 5, கேசிகா, 3, என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 12 மாலை 4:00 மணியளவில் கவுசல்யா, தனது இரண்டு குழந்தைகளை அழைத்துக் கொண்டு, அவரது பாட்டியிடம் வெளியே சென்று வருகிறேன் என கூறி சென்றவர். பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அவரது தந்தை சிந்தனைசெல்வன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, தாய் மற்றும் இரு குழந்தைகளை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us