ADDED : ஜூன் 22, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த, மேல வெளியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வி, 38. விவசாய கூலி தொழிலாளி. இவரது தாயார் கமலம், 56. கடந்த மே 20ம் தேதி இரவு, 8:00 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதாக கூறிவிட்டுச் சென்ற கமலம், வெகுநேரமாயும் வீட்டுக்கு வரவில்லை.
பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது தாயாரை காணவில்லை என, மகள் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.