தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்


ADDED : நவ 10, 2025 02:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 10, 2025 02:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வெங்கமேட்டில், 10,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள தெருக்களில் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் குழாய்களுக்கு சீரமைப்பு உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. மேலும், பல பகுதிகளில், குடிநீர் குழாய் உடைந்து விடுகிறது. மேலும், நகரில் பாதாள சாக்டை குழாய்களில் அழுத்தம் காரண-மாக, பல இடங்களில் பள்ளம் விழுகிறது. அதை சீரமைக்கவும் பள்ளம் தோண்டப்படுகிறது. ஆனால், அந்த பணிகள் முடிந்த பின், பள்ளம் தோண்டப்பட்ட இடங்களில், உடனடியாக சாலை அமைக்கப்படுவது இல்லை.இதனால், முக்கிய தெருக்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இந்த பகுதியில், சரியான திட்டமிடல் இல்லாமல் புதிய சாலை அமைக்கப்பட்டு வருகிறது. சாலை அமைக்கப்பட்ட-வுடன், பல்வேறு பணிகளுக்கு சாலையில் குழி தோண்டப்படுகி-றது. இவ்வாறு, சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர். அவ்வப்போது, சிறிய விபத்துகளும் ஏற்படுகின்றன. சாலைகளை விரைவாக சீர-மைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us