/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாய்க்கால் பாலத்தில் மண் அரிப்பால் ஓட்டுனர்கள் அச்சம்
/
வாய்க்கால் பாலத்தில் மண் அரிப்பால் ஓட்டுனர்கள் அச்சம்
வாய்க்கால் பாலத்தில் மண் அரிப்பால் ஓட்டுனர்கள் அச்சம்
வாய்க்கால் பாலத்தில் மண் அரிப்பால் ஓட்டுனர்கள் அச்சம்
ADDED : அக் 15, 2024 07:21 AM
கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம், நெடுஞ்சாலை வாய்க்கால் பாலம் அருகில் மழை காரணமாக சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், ஓட்டுனர்கள் அச்சமடைந்துள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, மகாதானபுரம் நெடுஞ்சாலை முதல் மேட்டு மகாதானபுரம், பழைய ஜெயங்கொண்டம், பஞ்சப்பட்டி வரை மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை அருகில் மேட்டு மகாதானபுரம் பகுதியில், கட்டளை இரட்டை வாய்க்கால் நடுவில் பாலம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வாய்க்கால் அருகில் உள்ள சாலையில், அரிப்பை தடுக்கும் வகையில் மண் கொட்டி சமன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சாலையோரத்தில் இருந்து மண் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து, பெரிய பள்ளமாக பாலத்தின் அருகில் மாறி விட்டது. மேலும் அந்த பகுதி குறுகிய வளைவாக இருப்பதால் பஸ் மற்றும் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்கின்றனர். சாலையோரம் பள்ளத்தால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில், வளைவு வரை தடுப்பு சுவர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.