ADDED : ஆக 17, 2026 06:19 AM
கரூர்:சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால், வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர்.
கரூர்-சேலம்
தேசிய நெடுஞ்சாலை, வேலாயுதம்பாளையம் பகுதிகளில் கோழி, வாத்து
இறைச்சி கடைகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து
இறைச்சிக் கழிவுகள் கொண்டு வந்து சாலையோரம் கொட்டப்படுகின்றன.
இதனால், நாள்தோறும், கரூர்---சேலம் பைபாஸ் சாலையில் நடந்து செல்வோரும்,
டூவீலரில் செல்வோரும் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக்
கொண்டு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த
கோழிக்கழிவுகளை சாப்பிட அப்பகுதியில், நாய்கள் கூட்டம், கூட்டமாக
சுற்றித்திரிகின்றன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில்
சிக்கும் நிலை ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, வாங்கலில் இருந்து
நொய்யல் செல்லும் வழி போன்ற பகுதிகளில், கழிவு கள் கொட்டப்பட்டு,
சுகாதார சீர்கேடு ஏற்படுத்தப்படுகிறது. இப்பகுதியில் கோழி
இறைச்சி கழிவுகளை கொட்டாமல் தடுக்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பாக்கின்றனர்.
