/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.,அருண் நேரு
/
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.,அருண் நேரு
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.,அருண் நேரு
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த எம்.பி.,அருண் நேரு
ADDED : ஆக 28, 2024 07:42 AM
குளித்தலை: பெரம்பலுார் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, குளித்தலை சட்டசபை தொகுதியில் மூன்றாவது நாளாக நேற்று காலை எம்.பி., அருண் நேரு குளித்தலை மேற்கு ஒன்றியம், கிழக்கு ஒன்றிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் ஒரு பகுதியாக ராஜேந்திரம் பஞ்., பரளி கிராமத்தில் நன்றி தெரிவிக்கும் போது, கிராம மக்கள் தண்ணீர் பள்ளி பரளி நெடுஞ்சாலையில் உள்ள ரயில்வே கேட்டில், குகை வழி பாதை பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, மேட்டுமருதுார் கிராம மக்கள் அளித்த கோரிக்கை மனுவில், மருதுார் ரயில்வே கேட்டில் அமைக்கப்பட்ட குகை வழி பாதை பணி, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. இதனால், நெடுஞ்சாலையை பயன்படுத்தும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், விவசாயிகள், 10 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, மேட்டு மருதுார் குகைவழி பாதை பணியை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., மாணிக்கம், மாவட்ட பஞ்.,குழு துணை தலைவர் தேன்மொழி தியாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் சந்திரன், தியாகராஜன், மாவட்ட அவை தலைவர் ராஜேந்திரன், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

