/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சேறும் சகதியுமான சாலை; சரி செய்ய மக்கள் கோரிக்கை
/
சேறும் சகதியுமான சாலை; சரி செய்ய மக்கள் கோரிக்கை
ADDED : டிச 12, 2024 07:33 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையிலி-ருந்து, குமாரமங்கலம் ரயில்வே பாதை வழியாக, திருச்சி கரூர் ராணி மங்கம்மாள் சாலை, அய்யர்மலை, தோகைமலைக்கு செல்ல முக்கிய பிரதான சாலையாக இருந்து வருகிறது.
நெடுஞ்சாலையில் குமாரமங்கலம் நுாலகம் அருகே குண்டும் குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் கடந்த மூன்று மாதங்க-ளுக்கு மேலாக இருந்து வருகிறது. இச்சாலை வழியாக அரசு பஸ் மற்றும் தனியார் பள்ளி. கல்லுாரி பஸ்.வேன். கனரக வாகனம். கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பலமுறை நெடுஞ்சாலை துறையிலும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்தும், கண்டும் காணாமல் உள்ளனர்.விபத்தை தடுக்க தார் சாலையை செப்பனிட்டு, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

