தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்


ADDED : ஜூன் 23, 2026 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2026 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்; புகழூர் நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியா-ளர்கள், நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புகழூர் நகராட்சியில், 70 ஆண்கள், 40 பெண்கள் என, 110 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணி-யாற்றி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரண்டு ஷிப்ட் வேலை பார்க்க வேண்டும், 50 வயதுக்கு மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியா-ளர்களை வேலைக்கு வர வேண்டாம் என, நக-ராட்சி ஆணையாளர் கூறுவதாக கூறி, நேற்று காலை பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவ-லக வளாக த்தில், மேற்பார்வையாளர் சந்திர-சேகர் தலைமையில் வேலை நிறுத்தத்தில் ஈடு-பட்டனர்.இதுகுறித்து நகராட்சி தலைவர் குணசேகரன், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட, ஒப்-பந்த துாய்மை பணியாளர்களிடம் பேச்சு-வார்த்தை நடத்தினார். அப்போது,

நகராட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக தொடர்ந்து வரும், பழைய நடைமுறையே பின்-பற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டது. இதைய-டுத்து, துாய்மை பணியாளர்கள் வழக்கம் போல் பணிக்கு திரும்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us