/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தெரு விளக்கு வசதி கேட்டு மா.கம்யூ., வலியுறுத்தல்
/
தெரு விளக்கு வசதி கேட்டு மா.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : ஆக 19, 2025 01:21 AM
கரூர், க.பரமத்தி, காவிரி நகருக்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என மா.கம்யூ., வலியுறுத்தியுள்ளது.
க.பரமத்தியில், மா.கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம் நடந்தது. க.பரமத்தி நிர்வாகி அன்புராஜன் தலைமை வகித்தார். க.பரமத்தி காவிரி நகர் முதல் குறுக்கு தெரு வரை, தெரு விளக்கு வசதியின்றி இரவு நேரங்களில் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மாரியம்மன் கோவில் கிழக்கு, மேற்கு தெரு ஆதிரெட்டிபாளையம் பட்டியலின மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு, காவிரி கூட்டு குடிநீர் வழங்க வேண்டும். கரூர்--கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தில், க.பரமத்தி கடைவீதியில் வடிகால் தளம் இடிந்து மக்களுக்கு இடையூறாக இருப்பதால், அவற்றை உடனே சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

