/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் பள்ளம் மூடல் மாநகராட்சி சுறுசுறுப்பு
/
சாலையில் பள்ளம் மூடல் மாநகராட்சி சுறுசுறுப்பு
ADDED : மே 24, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்தனர்.கரூர், ஐந்து ரோடு பிரிவு கோடீஸ்வரர் கோவில் முன், பள்ளம் ஏற்பட்டது.
இதனால், அந்த இடத்தில், வாகனங்கள் ஒதுங்கி செல்லும் வகையில் பேரி கார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் என நேற்று முன்தினம் நமது நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.இதையடுத்து, கரூர் மாநகராட்சி ஊழியர்கள் பள்ளத்தை மூடி, எந்தவித இடையூறும் இல்லாமல் சாலை போக்குவரத்து நடந்து வருகிறது.