/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகராட்சி அவசர கூட்டம்; 23 தீர்மானம் நிறைவேற்றம்
/
நகராட்சி அவசர கூட்டம்; 23 தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : அக் 26, 2024 06:27 AM
குளித்தலை: குளித்தலை நகராட்சி அவசர கூட்டம் நேற்று தலைவர் சகுந்தலா தலைமையில் நடந்தது.
துணைத் தலைவர் கணேசன், கமிஷனர் நந்த-குமார், பொறியாளர் கார்த்திக் ஆகியோர் முன்-னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் தேவராஜ் தீர்மானங்களை வாசித்தார்.குளித்தலை நகராட்சி பகுதியில் புதிய குடியிருப்-புகள் கட்ட, அனைத்து சுய சான்றிதழ்கள் அடிப்ப-டையில் இணைய தளம் வழியாக வழங்குவ-தற்கு அனைத்து கட்டணங்களும் மற்றும் சொத்து வரி, தொழில் வரி உயர்வை திரும்பபெற்று, பொது மக்கள் பாதிக்காத வகையில் பழைய வரி இனங்களில் வசூல் செய்யவேண்டும். கரூர்--திருச்சி நெடுஞ்சாலை பெரியார் நகரில் காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும் என, கவுன்சிலர் கீதா, துணைத் தலைவர் கணேசன் பேசினர்.
குளித்தலை நகராட்சியில் மட்டும் வரிகள் ஏற்ற-வில்லை. தமிழகம் முழுவதும் அரசு வழிக்-காட்டுதல் படி வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கு உரிய நடவ-டிக்கை எடுக்கப்படும் என, கமிஷனர் நந்தகுமார் தெரிவித்தார்.கூட்டத்தில், 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்-டது.