/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
/
மாநகராட்சி ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
ADDED : பிப் 11, 2025 07:25 AM
கரூர்: கரூர் மாநகராட்சி ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் கூட்டம், தலைவர் சத்தியமூர்த்தி
தலைமையில், அலுவலகத்தில் நடந்தது.
அதில், ஓய்வூதியர்கள் மற்றும் பொதுமக்களின் ஆண்டு வரு-மானம், 12 லட்ச ரூபாய் வருமான வரி விலக்கு அளித்துள்ள, மத்-திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது, ஓய்வூதியர்கள் வாழ்வு சான்று,
வருங்காலத்தில் ஜீவன் பிரமான் திட்டம் மூலம், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உத்தரவுக்கு நன்றி
தெரிவிப்பது, கண் புரை நீக்க அறுவை சிகிச்சைக்கு, 18 ஆயிரம் ரூபாய் வழங்கிய காப்பீடு நிறுவனத்தை
கண்டிப்பது உள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்-றப்பட்டன. கூட்டத்தில், துணைத்தலைவர் அகமத்,
செயலாளர் சேகர், துணை செயலாளர் நடராஜன் உள்பட, பலர் பங்கேற்றனர்.