/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
உதவி மின் பொறியாளர் மர்ம சாவு: விசாரணை
/
உதவி மின் பொறியாளர் மர்ம சாவு: விசாரணை
ADDED : ஏப் 27, 2025 04:49 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த வீரராக்கியம், பாலராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கமுனியப்பன், 43; ஊட்டி, பில்லுாரில் உள்ள தமிழ்நாடு மின்வாரியத்தில் உதவி மின் பொறியாளராக பணிபு-ரிந்து வந்தார். கடந்த, 25ல் விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் ஓய்வு எடுப்பதாக கூறிவிட்டு படுக்கை அறையில் துாங்க சென்றார். மனைவி கோமதி, 38, மகன் கிஷோர் ஆகிய இருவரும், தோட்டத்திற்கு சென்று விட்டனர். மதியம், 1:30 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தனர்.
அப்போது துாங்கி கொண்டிருந்த கணவர் தங்க முனியப்பனை, மனைவி கோமதி எழுப்பியுள்ளார். அவர் எழுந்திருக்காததால், அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், தங்க முனியப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி-வித்தார். இதுகுறித்து அவரது மனைவி கோமதி அளித்த புகார்-படி, மாயனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

