sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளை திருடும் மர்ம கும்பல்

/

க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளை திருடும் மர்ம கும்பல்

க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளை திருடும் மர்ம கும்பல்

க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடைகளை திருடும் மர்ம கும்பல்


ADDED : ஜன 09, 2026 05:16 AM

Google News

ADDED : ஜன 09, 2026 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: க.பரமத்தி சுற்றுவட்டார பகுதிகளில், நள்ளிரவில் டார்ச் லைட்-டுடன் கால்நடைகளை திருடும் மர்ம நபர்களால் அச்சம் ஏற்பட்-டுள்ளது.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட விஸ்வநாத-புரி, குளத்துார்பட்டி, தண்ணீர்பந்தல், சாலபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், கடந்த ஒரு மாதமாக நள்ளிரவு நேரங்-களில், டார்ச் லைட்டுடன் வந்து கால்நடைகளை மர்ம கும்பல் திருடி செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நி-லையில், விஸ்வநாதபுரியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், வீட்டின் அருகே ஆட்டு பட்டி வைத்துள்ளார். ஒரு மாதத்துக்கு முன்பு நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் ஆட்டுப்பட்டியில் இருந்த ஆட்டை திருடி சென்றுள்ளனர். இதனால் அச்சமடைந்த அவர், வீட்டின் முன்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார்.இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, மீண்டும் நள்-ளிரவில் டார்ச் லைட்டுடன் ஒருவர் கால்நடைகளை திருடும் நோக்கில் வந்துள்ளார். ஆனால் எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து தப்பிச் சென்றது தொடர்பான காட்சிகள், ராமச்சந்-திரன் பொருத்தியிருந்த 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளன. மர்ம கும்பலை உடனடியாக கண்டறிந்து, சட்டப்படி நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வலியுறுத்தி உள்ளனர். இப்பகுதியில் மட்டும் ஆடு, மாடு என, 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் திருட்டு போயுள்ளதாக கால்-நடை வளர்ப்போர் கூறினர்.






      Dinamalar
      Follow us