/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விவசாயி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் தம்பதியரை மிரட்டி 22 பவுன் கொள்ளை

ADDED : அக் 27, 2024 03:55 AM
குளித்தலை: சேங்கல் பகுதியில் விவசாயி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், தம்பதியரை கத்தியை காட்டி மிரட்டி, 22 பவுன் நகையை கொள்-ளையடித்துக்கொண்டு காரில் தப்பினர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த சேங்கல் பஞ்., மேல-பண்ணைக்களத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 57; மனைவி சுப்பு-ரத்தினம், 52; தம்பதியர், நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், 4 பேர், கத்தியை காட்டி மிரட்டி, சுப்புரத்-தினம் அணிந்திருந்த, 6 பவுன் தாலிக்கொடியை பறித்தனர். தொடர்ந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 16 பவுன் நகைகள் என, மொத்தம், 22 பவுன் நகையை எடுத்துக்கொண்டு பின்புற வாசல் வழியாக சென்றனர். இதையடுத்து, ரவிச்சந்திரன் கத்தும் சத்தம் கேட்டு ஓடி வந்த அதே ஊரை சேர்ந்த தனுஷ் ராமநாதன், 41, கொள்ளையர்களை விரட்டிச் சென்றார். அப்போது அவரின் இடது கையில் அரிவாளால் வெட்டிவிட்டு, வெள்ளை நிற காரில் கொள்ளையர்கள் தப்பினர். படுகாயமடைந்த தனுஷ் ராமநாதன், கரூர் தனியார் மருத்துவ-மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விவசாயி ரவிச்சந்திரன் கொடுத்த புகார்படி, மாயனுார் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசா-ரித்து வருகிறார்.