/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூக்களை பறிக்காமல் விட்டதால் பூத்து குலுங்கும் 'நந்தியா வட்டம்'
/
பூக்களை பறிக்காமல் விட்டதால் பூத்து குலுங்கும் 'நந்தியா வட்டம்'
பூக்களை பறிக்காமல் விட்டதால் பூத்து குலுங்கும் 'நந்தியா வட்டம்'
பூக்களை பறிக்காமல் விட்டதால் பூத்து குலுங்கும் 'நந்தியா வட்டம்'
ADDED : ஜூலை 24, 2025 01:32 AM
நாமகிரிப்பேட்டை, கூலிக்கு கூட கட்டுப்படியாகாததால், செடியில் பறிக்காமல் விடப்பட்ட நந்தியா வட்டம் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
நாமகிரிப்பேட்டை யூனியன், மூலப்பள்ளிப்பட்டி, மெட்டாலா, ஆர்.புதுப்பட்டி, கோரையாறு, தண்ணீர்பந்தல்காடு, கார்கூடல்பட்டி, மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் அதிகளவு பூ சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கு, அரளி, சாமந்தி, குண்டுமல்லி, நந்தியா வட்டம், கோழிக்கொண்டை, பட்டன் ரோஸ் உள்ளிட்ட செடிகள் அதிகளவு வளர்க்கப்படுகின்றன. முக்கியமாக, நந்தியா வட்டம் அதிகளவு பயிரிடப்பட்டுள்ளது. நந்தியா வட்டம் பூ அழகுக்காகவும், மாலைக்காகவும் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனால், முகூர்த்த நாட்களில் நந்தியா வட்டம் கிலோ அதிகபட்சம், 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆனால், தற்போது ஆடி மாதம் தொடங்கியதை அடுத்து திருமணம் உள்ளிட்ட எந்த சுப நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. இதனால் பூக்கள் விலை மிகவும் சரிந்துள்ளது. தற்போது, நந்தியா வட்டம் ஒரு கிலோ, 20 ரூபாயில் இருந்து, 30 ரூபாய் வரை விற்கிறது. பூ எடுக்கும் கூலி செலவே, 30 ரூபாய் வரை ஆகிறது.
இதனால், விவசாயிகள் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர். பூக்கள் பூத்து குலுங்குவதுடன் வயல் முழுவதும் பூக்கள் கொட்டி கிடக்கின்றன.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''பூ விலை குறைந்துள்ளதால் செடியில் பூ பறிக்கும் கூலி கூட கிடைக்காது. திருமண முகூர்த்தம் தொடங்கியதும் சாதாரணமாக, 300 ரூபாய் வரை கிடைக்கும்,'' என்றனர்.