/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிகாரிகள் அலட்சியத்தால் நாசமாகி வரும் நங்காஞ்சி ஆறு
/
அதிகாரிகள் அலட்சியத்தால் நாசமாகி வரும் நங்காஞ்சி ஆறு
அதிகாரிகள் அலட்சியத்தால் நாசமாகி வரும் நங்காஞ்சி ஆறு
அதிகாரிகள் அலட்சியத்தால் நாசமாகி வரும் நங்காஞ்சி ஆறு
ADDED : மே 15, 2025 01:41 AM
அரவக்குறிச்சி ;அமராவதி ஆற்றின் துணை ஆறாக இருக்கும் நங்காஞ்சி ஆறு, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், வடகாடு கிராம மலைப்பகுதியில் உருவாகி, தலையூத்து என்ற இடத்தில் சிற்றருவியாக மாறி இடையகோட்டை வழியாக குடகனாற்றில் கலந்து, கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் கலந்து வந்தது நங்காஞ்சி ஆறு.கரூர் மாவட்டத்தில், நங்காஞ்சி ஆற்றை நம்பி பெரிய அளவிலான விவசாயம் நடைபெறவில்லை என்றாலும், நிலத்தடி நீர் பெருகுவதற்கும், குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வந்தது.
வற்றாத ஜீவநதியாக உள்ள காவிரி ஆறு கூட, இயற்கையின் மாறுபட்ட சுழற்சியால் கடந்த காலங்களில் வறட்சியை சந்தித்தது.
மழை வரும் போது மட்டுமே, ஆற்றில் தண்ணீர் ஓடியது. பெரும்பாலான காலங்களில் நதி காய்ந்து கிடந்ததால், பல்வேறு தாவரங்கள் முளைத்து நதி துார்ந்து போனது.
இந்நிலையில், கைவிடப்பட்ட ஆறாக நங்கஞ்சி ஆறு மாறியது. இதனால், பொதுமக்கள் குப்பை கழிவுகளை கொட்டும் இடமாக மாற்றினர். ஆறுகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளும் அலட்சியம் காட்டினர்.
அதன் விளைவாக இன்று இறைச்சி கழிவுகளை கொட்டும் இடமாகவும், பன்றிகள் உலாவும் பகுதியாக நங்காஞ்சி ஆறு மாறி வருகிறது.
மத்திய அரசு, ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, பல்வேறு நதிகளை ஒருங்கிணைத்து நீர் மேலாண்மை செய்து, பல்வேறு திட்டங்களை தீட்டி வீடுகள் தோறும் குடிநீர் வழங்க செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் பாரம்பரியமாக இருந்த நங்காஞ்சி ஆறு பாலைவனமாக மாறுவதற்கு முன்பாக, அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.