/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நங்கவரம், நச்சலுார் சந்தைக்கு அடிப்படை வசதி தேவை
/
நங்கவரம், நச்சலுார் சந்தைக்கு அடிப்படை வசதி தேவை
ADDED : மே 03, 2024 07:17 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த நச்சலுார், நங்கவரம் ஆகிய கிராமங்களில் வாரச்சந்தை செயல்படுகிறது.
நச்சலுாரில் ஞாயிற்று கிழமைதோறும், செல்லாண்டியம்மன் கோவில் டவுன் பஞ்., சமுதாய கூடம் எதிரில் செயல்பட்டு வருகிறது. இதேபோல், நங்கவரம் தெற்குபட்டி சமுதாய கூடம் அருகில் திங்கள்கிழமை தோறும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.இரு சந்தைகளிலும் குளித்தலை, தோகைமலை, பஞ்சப்பட்டி, பெருகமணி, அய்யர்மலை பகுதி வியாபாரிகள் காய்கறி, மளிகை பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். மேலும் சுற்றுப்பகுதி விவசாயிகள், தங்கள் நிலத்தில் பயிரிடப்பட்ட காய்கறி, தானியங்களை விற்பனை செய்கின்றனர்.வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளான விற்பனை மேடை, மின் விளக்கு, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் இல்லை. வாரச்சந்தைக்கு உரிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர முன்வர வேண்டும்.