/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நங்கவரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
/
நங்கவரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம்
ADDED : அக் 01, 2024 06:58 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது.
டவுன் பஞ்., செயல் அலுவலர் காந்தரூபன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் 2024-25ன் கீழ், பொது நிதியில் கல்லடைச்சி வாய்க்கால் கரையில் தடுப்பு சுவருடன் கூடிய தார் சாலை அமைத்தல் ரூ.157 லட்சம். நங்கவரம் டவுன் பஞ்., பள்ளி மேம்பாட்டு மானிய நிதி திட்டத்தின் கீழ், நச்சலுார் உயர்நிலைப் பள்ளியில் நான்கு வகுப்பறையுடன் கூடிய கட்டடம் அமைத்தல், 78 லட்சம்.
வார்டு ஒன்று முதல், 18 வார்டுகளுக்கும் சிமென்ட் சாலை அமைத்தல், மயானம் அமைத்தல், மினி டேங்க் அமைத்தல், தொட்டி படித்துறை அமைத்தல், சிறுபாலம் அமைத்தல், கழிவு நீர் வடிகால் அமைத்தல், ஈமக்கிரியை மண்டபம் கட்டுதல் உள்ளிட்ட பல வளர்ச்சி பணிகளுக்கு, 114 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் கவுன்சிலர்கள் செந்தில்வேலன், ரவி, அமுதா, சீதா, லதா, வசந்தி, பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.