ADDED : மார் 11, 2026 08:50 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்,:நரசிங்கபுரத்தில், குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர்
மாவட்டம், சிந்தலவாடி பஞ்சாயத்து நரசிங்கபுரத்துக்கு
புனவாசிப்பட்டி சாலை அருகில் உள்ள தொட்டி பைப் லைன் மூலம், குடிநீர்
வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் நரசிங்க-புரத்தில் புதிய
குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி இதுவரை
பயன்பாட்டிற்கு வரவில்லை.
மேலும், தற்-காலிகமாக புனவாசிப்பட்டி
சாலை அருகில் உள்ள தொட்டிக்கு ஏற்றப்படும் இணைப்பு பகுதியில் இருந்து,
குடிநீர் வினியோகம் நடக்கிறது. எனவே, புதிதாக கட்டப்பட்ட
தொட்டிக்கு, தனியாக குடிநீர் இணைப்பு வழங்கி அதன் மூலம் தண்ணீர் ஏற்றி
மக்க-ளுக்கு வினியோகம் செய்ய பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
