sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பசுபதீஸ்வரர் கோவில் நடராஜர் சிலை சேதம்

/

பசுபதீஸ்வரர் கோவில் நடராஜர் சிலை சேதம்

பசுபதீஸ்வரர் கோவில் நடராஜர் சிலை சேதம்

பசுபதீஸ்வரர் கோவில் நடராஜர் சிலை சேதம்


ADDED : ஜன 05, 2024 11:55 AM

Google News

ADDED : ஜன 05, 2024 11:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் நடராஜர் சிலை சேதமடைந்ததை, அதிகாரிகள் மூடி மறைத்துள்ளனர்.

கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். தமிழ்நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற, 274 சிவன் கோவில்களில், இது 211-வது ஆலயம். இங்கு பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த, 27ல் ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடந்தது. அப்போது, நடராஜர் சிலை சேதமடைந்ததை மறைத்துள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத்துறை மீது புகார் எழுந்துள்ளது.இது குறித்து, ஹிந்து முன்னணி கரூர் நகர துணைத் தலைவர் செந்தில்குமார் கூறியதாவது:

கரூர், பசுபதீஸ்வரர் கோவில் மூலவர் அருகில் உள்ள மகா மண்டபத்தில் சிவகாமசுந்தரி, சமேத நடராஜர் (ஐம்பொன் சிலை) வீற்றிருந்து அருள்புரிந்து வருகின்றனர். ஆருத்ரா தரிசனத்தன்று அபிஷேகத்தை தொடர்ந்து, ராஜகோபுரத்திற்கு வெளியில் சப்பரத்தில் சுவாமியும், அம்பாளும் தனித்தனியாக எழுந்தருளினர்.

அப்போது சப்பரத்தில் ஏற்றும் போது, நடராஜர் சிலையின் கீழ் பகுதி உடைந்து இருந்தது. அதை கயிறு கட்டி, நடராஜர் திருவடியை அர்ச்சகர் கைகளால் பிடித்து வெளிப்பிரகாரம் வலம் வந்துள்ளார்.

பின், கோவில் உள்ளே சப்பரத்துடன் கொண்டு சென்றுள்ளனர். நடராஜரை பல்லக்கில் கொண்டு செல்லாதது குறித்து பக்தர்கள் கேட்டதற்கு, சரியான பதில் இல்லை.

இந்நிலையில், கோவிலில் தரினம் செய்ய சென்ற பக்தர்கள், நடராஜ பெருமான் சன்னதியில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதுபற்றி விசாரித்து பிறகு, சுவாமி சிலையின் பாதம் உடைந்து விட்ட தகவல் தெரிந்தது. மேலும், பின்னமாக (உடைந்த) நடராஜர்

திருமேனியை ஊர்வலமாக சென்றிருப்பது ஆகம விதிமீறலாகும். இது குறித்து வெளியில் தெரிவிக்காமல் ஹிந்துசமய அறநிலையத்துறை மூடி மறைத்துள்ளது.

இவ்வாறு கூறினார்.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சரவணன் கூறுகையில்,'' கோவிலில் சுவாமி புறப்பாடு முடிந்த பின், சிலை சேதமடைந்தது தெரியவந்தது. இதனால் ஆகம விதிப்படி, பரிகார பூஜை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை- -ஸ்தபதியிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்று (நேற்று) பார்வையிட்டார். அவரது ஆலோசனையின் படி நடராஜர் சிலை சரி செய்து மீண்டும் வைக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us