ADDED : பிப் 10, 2026 05:13 AM
கரூர்: திருப்பூர் ஐ.டி.ஐ.,யில், மண்டல அளவிலான தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வரும், 12ல் நடக்கிறது என, கலெக்டர் தங்-கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு தொழிற்ப-யிற்சி நிலைய வளாகத்தில், மண்டல அளவி-லான தேசிய தொழில் பழகுனர் சேர்க்கை முகாம் வரும், 12 காலை, 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், முன்னணி தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்கள் நிறுவனத்தில் உள்ள தொழிற்பழகுனர் காலியி-டங்களுக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.
தேர்வு பெற்றவர்களுக்கு தொழிற்பழகுனர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற் பழகுனர் சான்றிதழ் வழங்கப்படும்.
தேசிய தொழிற் பழகுனர் சான்றிதழ் பெற்றவர்க-ளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் முன்-னுரிமை கிடைக்கிறது. முகாமில் தகுதியுடைய ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், 8ம் வகுப்பு வரை, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படித்த மாணவர்களும் பயிற்சியில் சேர்ந்து தொழிற் பழகுனர் சான்றிதழ் பெறலாம்.
மேலும் விபரங்களை உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், 2ம்தளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், வெண்ணைமலை, கரூர்- அலுவலகத்திலும் மற்றும் 04324-299422, 94430 15914, 95669 92442 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது
