/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய பேரிடர் மீட்பு படையினர் காவிரி ஆற்றில் ஒத்திகை நிகழ்ச்சி
/
தேசிய பேரிடர் மீட்பு படையினர் காவிரி ஆற்றில் ஒத்திகை நிகழ்ச்சி
தேசிய பேரிடர் மீட்பு படையினர் காவிரி ஆற்றில் ஒத்திகை நிகழ்ச்சி
தேசிய பேரிடர் மீட்பு படையினர் காவிரி ஆற்றில் ஒத்திகை நிகழ்ச்சி
ADDED : ஜன 10, 2025 01:29 AM
குளித்தலை, : குளித்தலைக்கு, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையின் துணை கமாண்டர் ஸ்ரீதர் தலைமையிலான, 32 வீரர்கள் வந்தனர். இவர்கள் கடந்த, 6, 7ல் அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் உள்ள, ரோப்காரில் எதிர்பாராத விதமாக சிக்கிக் கொள்ளும் பயணிகளை பாதுகாப்புடன் மீட்பது குறித்து ஒத்திகை நடத்தினர்.
இரண்டாம் கட்டமாக நேற்று காலை, கடம்பன் துறை காவிரி ஆற்றில் மூழ்கிய நபரை மீட்பது எப்படி, மருத்துவ முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்தும் செயல்முறையுடன் ஒத்திகை நடைபெற்றது. முசிறி தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் காவிரியில் மூழ்கிய நபரை எவ்வாறு காப்பாற்றுவது, படகு சவாரியில் பாதுகாப்பு உடை கட்டாயம் அணிய வேண்டும் என, எடுத்துரைத்தனர்.
மேலும், விசைப்படகு ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததை, பேரிடர் மீட்பு படை குழுவினர் மோட்டார் படகு மூலம் ஆற்றில் தத்தளித்த நபர்களை மீட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கும் விளக்க ஒத்திகை
மேற்கொண்டனர். தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் வடிவேல், மாவட்ட உதவி அலுவலர் கோமதி, முசிறி தீயணைப்பு நிலைய அலுவலர் கர்ணன், குளித்தலை இன்ஸ்பெக்டர் உதயக்குமார் மற்றும் பொது சுகாதார துறையினர், வருவாய் துறையினர், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

