sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்: பு.த.க., தலைவர்

/

தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்: பு.த.க., தலைவர்

தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்: பு.த.க., தலைவர்

தமிழகத்தில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த வேண்டும்: பு.த.க., தலைவர்


ADDED : மார் 17, 2025 04:38 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், நேற்று இரவு, புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செய-லாளர் அசோகன் தலைமையில், நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற, கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நிருபர் களிடம் கூறியதாவது:

அருந்ததியருக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கீடு தொடர்பான அர-சாணையை ரத்து செய்ய வேண்டும். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு உரிமை மீட்க வேண்டும் ஆகியவற்றை வலி-யுறுத்தி வரும், டிச., அல்லது ஜன., மாதம், ஏழாவது மாநில மாநாடு மதுரையில் நடக்கிறது. அதற்கு முன்பாக, இதே கோரிக்-கையை வலியுறுத்தி வரும் மே, 17ல் திருச்சியில் பேரணி, பொதுக்கூட்டம் நடக்கிறது. அருந்ததியருக்கு வழங்கப்பட்டுள்ள உள் ஒதுக்கீடு காரணமாக, தேவேந்திர குல வேளாளர், ஆதி

திராவிடர்கள் கடந்த, 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்-றனர். இதுகுறித்து, கருத்து தெரிவிக்க எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., மறுத்து வருகிறார். இதனால், தெற்கே தேவேந்திர குல வேளாளரும், வடக்கே ஆதிதிராவிடர்களும், அ.தி.மு.க.,வுக்கு எதிராக ஓட்டு போட்டால், நிலைமை என்-னாகும் என்பதை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உணர வேண்டும்.

தி.மு.க., அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்களின் குழந்தைகள், பேரப்பிள்ளைகள் சி.பி.எஸ்.இ., திட்டத்தில் படிக்-கின்றனர். லண்டன் உள்ளிட்ட, வெளி நாடுகளுக்கும் சென்றும் படிக்கின்றனர். அதை தமிழக மக்கள் உணர்ந்து கொண்டால், தி.மு.க.,வினர் வரும், 2026 சட்டசபை தேர்தலில் எந்த கிராமத்-துக்கும் ஓட்டு கேட்டு செல்ல முடியாது. தமிழகத்தில் நடமாட முடியாது. இதனால், தமிழகத்தில் புதிய தேசிய கல்வி கொள்-கையை, தி.மு.க., அரசு செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us