தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நாட்டு துவரம் பருப்பு உற்பத்தி பணி

நாட்டு துவரம் பருப்பு உற்பத்தி பணி

நாட்டு துவரம் பருப்பு உற்பத்தி பணி


ADDED : ஏப் 12, 2026 05:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2026 05:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம், சேங்கல் பகுதியில், நாட்டு துவரம் பருப்பு உற்பத்தி பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த சேங்கல், சின்ன சேங்கல், முத்துரெங்கம்பட்டி, லட்சுமணம்பட்டி, பழைய ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி நிலங்களில் துவரை சாகுபடி செய்திருந்தனர். கடந்த மாதம் விளைச்சல் கண்ட, துவரை செடிகள் அறுவடை செய்து தரம் பிரிக்கப்பட்டது. பின்னர் பிரிக்கப்பட்ட துவரை பருப்பாக உற்பத்தி செய்யும் பணிகளில் தற்போது விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விளைந்த துவரைகளை, நல்ல செம்மண் கொண்டு கலவை செய்து வெயிலில் உலர்த்தப்படுகிறது. அதன்பின் சிவப்பு நிறத்திற்கு துவரை மாறுகிறது. பின்னர் மிஷின்களில் பருப்பு உடைக்கப்படுகிறது. அப்போது துவரம் பருப்பு நல்ல சிவப்பு கலரில் கிடைக்கிறது. இது போன்ற துவரம் பருப்பை மக்கள் பயன்படுத்தும் போது நல்ல சுவை கிடைக்கிறது. மேலும் நாட்டு துவரம் பருப்பு கிலோ, 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கிராம மக்கள் நாட்டு துவரம்பருப்பை, ஆர்வத்துடன் விவசாயிகளிடம் இருந்து வாங்கி செல்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us