/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் தேசிய நுாலக வார விழா
/
குளித்தலையில் தேசிய நுாலக வார விழா
ADDED : நவ 20, 2024 01:52 AM
குளித்தலையில் தேசிய
நுாலக வார விழா
குளித்தலை, நவ. 20-
குளித்தலை, காவேரி நகர் உழவர்சந்தை அருகில் கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று வாசகர் வட்டம் மற்றும் முழுநேர கிளை நுாலகம் சார்பில், 57-வது ஆண்டு தேசிய நுாலக வார விழா நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ., மாணிக்கம் தலைமை வகித்தார். குளித்தலை தி.மு.க., ஒன்றிய செயலர் தியாகராஜன், நுாலக வாசகர் வட்ட தலைவர் கிராமியம் நாராயணன், நுாலக வாசகர் வட்ட முன்னாள் தலைவர் கோபாலதேசிகன், வட்ட துணைத் தலைவர் அந்தோணிசாமி, கடவூர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் பள்ளி மாணவ, மாணவியர், வாசகர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ரம்யா கருணாநிதி, நுாலக வாசகர் வட்ட உறுப்பினர் சுந்தர் மற்றும் ஆசிரியர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.
நுாலகர் செல்வராஜ் நன்றி கூறினார்.