/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
/
தேசிய ஒற்றுமை தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
ADDED : நவ 01, 2024 01:27 AM
தேசிய ஒற்றுமை தினம்
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
கரூர், நவ. 1-
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், தேசிய ஒற்றுமை தினம் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி
நடந்தது.
கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்கு பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட
ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுனர்வினை பேண உறுதிமொழியை ஏற்கிறேன் என, கலெக்டர் தங்கவேல் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்று கொண்டனர்.
நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., கண்ணன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, உதவி ஆணையர் (கலால்) கருணாகரன், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் சண்முக வடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.