ADDED : ஜன 25, 2026 08:00 AM
அ நிறம் | அளவு
கரூர்: புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவ-னத்தில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மேலாளர் (மனித வளம்) சிவக்குமார் தலைமை வகித்தார்.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய, இந்திய குடிமக்களாகிய நாம் அனைவரும் தேர்தலில் நியாயமான முறையில் வாக்களிப்போம் என, ஆலையில் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.நிகழ்ச்சியில், முதன்மை மேலாளர்கள் மணி-கண்டன், வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்-றனர்.
