/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நவராத்திரி 4வது நாள் விழா கோலாகலம்
/
நவராத்திரி 4வது நாள் விழா கோலாகலம்
ADDED : அக் 07, 2024 03:41 AM
கரூர்: நாடு முழுவதும் நவராத்திரி உற்சவ விழா கடந்த, 3ல் தொடங்-கியது. நேற்று இரவு நான்காவது நாளையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், உற்சவர் அம்மன் ஜெய் துர்க்கா அலங்-காரத்தில், நேற்று இரவு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல், கரூர் மாரியம்மன் கோவிலில் உற்சவர் அம்மனுக்கு, கையில் தாமரை பூவுடன் கூடிய அலங்காரம், ஸ்ரீகன்னிகா பர-மேஸ்வரி அம்மன் கோவிலில், உற்சவர் அம்மனுக்கு காயத்திரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், கரூர் காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி, நான்காவது நாளையொட்டி கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில், ஏராள-மான பக்தர்கள் பங்கேற்று சுவாமி
வழிபட்டனர். பின், பக்தர்க-ளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* தான்தோன்றிமலை கல்யாண வெங்கட ரமண சுவாமி கோவிலில், புரட்டாசி திருவிழாவை யொட்டி, நேற்று இரவு உற்-சவர் திருவீதி உலா நடந்தது. அதில், வெள்ளி அனுமன் வாக-னத்தில் உற்சவர் வெங்கடரமண சுவாமி,
பக்தர்களுக்கு அருள்பா-லித்தார்.