ADDED : அக் 05, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிந்தலவாடியில் நவராத்திரி விழா
கிருஷ்ணராயபுரம், அக். 5-
சிந்தலவாடி, மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அம்மன் கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்து சிந்தலவாடி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பல்வேறு வகையான சுவாமி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டது. மேலும் அம்மனுக்கு தினமும் அபி ேஷகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் வழிபாடு செய்யப்படுகிறது. சிந்தலவாடி சுற்று வட்டார பகுதியில் இருந்து பலர் கலந்து கொண்டனர்.