ADDED : ஜூலை 05, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே, ராஜபுரம் செல்லும் சாலையில் பாரதியார் நகர் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது.
போக்குவரத்து அதிகமாக உள்ள இச்சாலையில், பாரதியார் நகர் பஸ் நிறுத்தத்தில் பய-ணிகள் நிழற்கூடம் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், வெயிலிலும், மழையிலும் நின்று அவதியுறுகின்றனர். வெயிலின் தாக்கத்தால் கர்ப்பிணிகள், முதியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இப்ப-குதியில் இருந்து வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ மாணவிகள் சிரமப்படுகின்றனர். எனவே இப்-பகுதியில், நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.