தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மலைவேம்பு மரங்கள் 6 ஆண்டுகளில் தயார்

மலைவேம்பு மரங்கள் 6 ஆண்டுகளில் தயார்

மலைவேம்பு மரங்கள் 6 ஆண்டுகளில் தயார்


ADDED : ஜன 02, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 02, 2026 04:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமகிரிப்பேட்டை: மலைவேம்பு மரங்கள் நடவு செய்த, 6 ஆண்டுகளில தயாராகி-விடும் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.

நாமகிரிப்பேட்டை வேளாண்மை துறை சார்பில் வெளியிடப்பட்-டுள்ள செய்திக்குறிப்பு:வேகமாக வளரும் மர வகைகளில் மலைவேம்பும் ஒன்று. நடவு செய்த, 6 முதல் 7 ஆண்டுகளில் அறுவடைக்கு தயாராகிவிடும்.

பேக்கிங் பெட்டிகள், பலகை, விவசாய கருவிகள், பென்சில், கட்டு மரம், இசைக்கருவிகள், தேயிலை பெட்டிகள் செய்ய மலைவேம்பு மரங்கள் பயன்படுகின்றன. மேலும், எரிபொருளா-கவும் பயன்படுத்தப்படுகிறது. மரக்கன்று, 4க்கு 4 அல்லது 5க்கு, 5 மீட்டர் இடைவெளியில் நடலாம். 30க்கு 30 செ.மீ., அளவில் குழி பறிக்க வேண்டும்.

ஜூன் முதல் அக்., வரை தண்ணீர் தாராளமாக விடலாம். 7 முதல், 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். குழிக்கு அரை கிலோ எரு அல்லது மண்புழு உரம் இட வேண்டும்.

பிளைவுட் உபயோகத்திற்கு, ஏழு ஆண்டுகளுக்கு பின் அறுவடை செய்யலாம். காகித தொழிற்சாலைக்கு, 2 முதல் 3 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஆறு ஆண்டுகள் முடிவில் ஒரு ஹெக்டே-ருக்கு, 200 டன் கிடைக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us