ADDED : அக் 22, 2024 01:14 AM
நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு
கரூர், அக். 22-
கரூர் மாவட்ட காவல் துறை சார்பில், நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி ஆயுதப் படை மைதானத்தில் நேற்று நடந்தது.
கடந்த, 1959 அக்., 21ல் காஷ்மீர் அருகே லடாக் பகுதியில், ஹாட் ஸ்பிரிங் என்ற இட த்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில், மத்திய பாதுகாப்பு படை போலீசார், 10 பேர் உயிரிழந்தனர்.
அந்த துயர சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் அக்., 21 ல் பணியின் போது இறந்த, இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நேற்று நடந்த, நீத்தார் நினைவு தினத்தில், உயிரிழந்த போலீசார் நினைவாக ஸ்துாபி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கு, கலெக்டர் தங்கவேல், எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஏ.டி.எஸ்.பி., க்கள், பிரேம் ஆனந்த், பிரபாகரன், டி.எஸ்.பி.,க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.