ADDED : மே 07, 2025 01:21 AM
கரூர்:நெரூர் சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், 111 வது ஆராதனை விழா இன்று நடக்கிறது.கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானம் உள்ளது. அதில், ஆண்டு
தோறும் மே மாதம் ஆராதனை விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த, 2 ல் சதாசிவ பிரமேந்திரர் பட உற்சவத்துடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து நேற்று வரை சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில், நாள்தோறும் உஞ்சவிருத்தி, கிராம பிரதட்சணம், லட்சார்ச்சனை, வேத பாராயணம் ஆகிய
நிகழ்ச்சிகள் நடந்தன.இன்று காலை, ஆராதனை விழாவையொட்டி, சதாசிவ பிரமேந்திரர் அதிஷ்டானத்தில் தெய்வீக சொற்பொழிவு, திவ்யநாம சங்கீர்த்தனை, பஜனை மற்றும் சதாசிவ பிரமேந்திரர் உற்சவம் நடக்கிறது. பிறகு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, நெரூர் சதாசிவ பிரமேந்திரர் சபா கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
