/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கி.புரம் அருகே கட்டளை வாய்க்காலில் புதிய பாலம்: கிராம மக்கள் மகிழ்ச்சி
/
கி.புரம் அருகே கட்டளை வாய்க்காலில் புதிய பாலம்: கிராம மக்கள் மகிழ்ச்சி
கி.புரம் அருகே கட்டளை வாய்க்காலில் புதிய பாலம்: கிராம மக்கள் மகிழ்ச்சி
கி.புரம் அருகே கட்டளை வாய்க்காலில் புதிய பாலம்: கிராம மக்கள் மகிழ்ச்சி
ADDED : ஏப் 20, 2025 01:48 AM
கரூர்:
கரூர் மாவட்டம், மாயனுார் கதவணையில் இருந்து, கட்டளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த பாசன வாய்க்கால், பல கிலோ மீட்டர் துாரம் கடந்து, திருச்சி மாவட்டம் உய்யங்கொண்டான் கால்வாய் மூலம், மீண்டும் காவிரியாற்றில் கலக்கிறது. இதன் மூலம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறுகிறது.
இந்நிலையில், கிருஷ்ணராயபுரம் பஞ்., யூனியன் மகாதானபுரம் கிராம பஞ்சாயத்தில், கட்டளை மேட்டு வாய்க்கால் குறுக்கே, பல ஆண்டுகளுக்கு முன், குறுகிய பாலம் கட்டப்பட்டது. அந்த பாலத்தின் வழியாக, கரூர் மற்றும் குளித்தலையில் இருந்து, பல்வேறு கிராம பகுதிகளுக்கு தனியார் மற்றும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கட்டளை மேட்டு வாய்க்கால் குறுக்கே கட்டப்பட்ட குறுகிய பாலத்தின் துாண்கள், தரைத்தளம், சேதம் அடைந்த நிலையில் உள்ளது. ஒருவேளை பாலம் இடிந்து விழும் நிலை ஏற்பட்டால், போக்கு வரத்து முழுமையாக துண்டிக்கப்படும். பல கிராம பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பல கிலோ மீட்டர் துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
குறிப்பாக, பஞ்சப்பட்டி, பழைய ஜெயங் கொண்டபுரம், லட்சுமணப்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், பெரும் பாதிப்பு அடைவர். இதுகுறித்து, நமது நாளிதழில் மேட்டு மகாதானபுரத்தில் கட்டளை மேட்டு வாய்க்கால் குறுக்கே, சேதம் அடைந்த நிலை யில் உள்ள, குறுகிய பாலத்தை அகற்றி விட்டு, புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என, செய்தி வெளியானது.
இதையடுத்து, புதிதாக உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கிராமப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

