/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் விறுவிறு
/
புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகள் விறுவிறு
ADDED : ஏப் 20, 2025 01:46 AM
கரூர்:
கரூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் விறு, விறுப்பாக நடந்து வருகிறது.
கரூர் மாநகராட்சி திருமாநிலையூரில், 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட திட்டமிடப்பட்டது. கடந்த, 2022 செப்., 3 ல் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இங்கு, புதிய நவீன வசதிகளுடன், 85 பஸ்கள் நிறுத்தக்கூடிய அளவிற்கு புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டமைப்பு வடிவமைப்பு உள்ளன. இதன் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன.
நீர் வழிப்பாதையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டப்படுகிறது என, சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு, கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டது. இதற்கு எதிராக, கரூர் மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இங்கு கட்டுமான பணியை தொடர தடையில்லை என, பிப்., 13ல் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. பின், கரூர் திருமாநிலையூரில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி விறு, விறுப்பாக நடந்து வருகிறது. தற்போது, 50 சதவீதம் கட்டுமான பணிகள் முடிவடைந்து உள்ளது. இன்னும், 3 மாதங்களுக்கு பணிகளை முடிக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகின்றன.

