/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் துவக்கி வைப்பு
/
புதிய வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் துவக்கி வைப்பு
புதிய வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் துவக்கி வைப்பு
புதிய வளர்ச்சி திட்ட பணிகள்: அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : டிச 29, 2024 01:05 AM
கரூர், டிச. 29-
கரூர் மாநகராட்சி மற்றும் கிராம பகுதிகளில், 14.97 கோடி ரூபாய் வளர்ச்சி திட்ட பணிகளை, அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.
கரூர் மாநகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் தங்கவேல் தலைமை வகித்தார். மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் சரவணன், மாநகராட்சி கமிஷனர் சுதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.